உள்நாடு

பால் மா விலையும் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

பால் மா கையிருப்பு தீர்ந்து விட்டதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா இருப்புக்கள் அடுத்த வாரம் மீண்டும் பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உரிய விலை திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, பால் மாவின் கையிருப்பு கிடைத்தவுடன் விலைகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டதுடன், அதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூபா. 250 மற்றும் 1 கிலோ பாக்கெட்டின் விலை ரூ. 600 ஆக அதிகரிக்க தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

விலை உயர்வால் தற்போது 400 கிராம் பால் மா பாக்கெட் ரூ.790 இற்கும் 1 கிலோ பாக்கெட் ரூ. 1945 இற்கும் விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

சஹ்ரான் ஹஷீமின் மனைவி ஆணைக்குழு முன்னிலையில்

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு