(UTV | கொழும்பு) – எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு நிதியுதவியாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிப்பதாவது, பங்களாதேஷுக்கு வழங்க வேண்டிய 450 மில்லியன் டாலர்களை வழங்குவதை ஒத்திவைக்க பங்களாதேஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் கிடைக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த உதவிகள் கிடைக்கும் வரை மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.