(UTV | கொழும்பு) – உணவு விஷமானதால் காலி – கொக்கலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 325 ஊழியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (ஏப்ரல் 19) எடுக்கப்பட்ட உணவு நச்சுத்தன்மையினால் ஊழியர்கள் சுகயீனமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவினருக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் தற்போது வைத்தியசாலையில் உள்ளதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.