விளையாட்டு

ரொனால்டோவுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

(UTV |  மான்செஸ்டர்) – பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த இவர் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகெஸ் கர்ப்பமாக இருந்தார். இந்த தம்பதி இரட்டை குழந்தையை எதிர்பார்த்தனர். பிறந்த இரட்டை குழந்தையில் ஒன்று இறந்துவிட்டது. நேற்று ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. ஆனால் ஆண் குழந்தை இறந்து விட்டது.

இதை ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது ஆண் குழந்தை இறப்பால் நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம். இந்த வலியை அனைத்து பெற்றோர்களும் உணர முடியும். பெண் குழந்தைதான் தற்போது எங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கொடுக்கிறது என்றார். ரொனால்டோவுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன.

Related posts

2019 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது ​மேற்கிந்தியத் தீவுகள் அணி

தாய் மண்ணில் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்!!

சன்ரைசர்ஸ் Playoff சுற்றுக்கு தகுதி