உலகம்

“எங்கள் இராணுவத்தை நம்புங்கள், அது மிகவும் வலிமையானது”

(UTV |  கீவ்) – உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உக்ரைனில் இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளதாகவும் எங்கள் இராணுவத்தை நம்புங்கள் அது மிகவும் வலிமையானது என தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்கள் கடந்து விட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா பல உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் திங்களன்று நான்கு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் பாவ்லோ கிரிலென்கோ தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

நியூசிலாந்தில் 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

கொவிட் 19 : உலகளவில் இதுவரை 228,224 பேர் பலி