(UTV | கொழும்பு) – அவசரத் தேர்தலுக்கு செல்வதோ அல்லது அரசியலமைப்பை திருத்துவதோ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உதவாது என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் தமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என முன்னாள் பிரதமர் தனிப்பட்ட சந்திப்பொன்றில் தெரிவித்ததாக பரவலாகப் பேசப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.