உள்நாடுகிசு கிசு

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க இன்று புதிய அணுகுமுறை?

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி செயலகத்திற்கான அணுகு வீதியை மறித்து காலி முகத்திடல் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (18) தடை உத்தரவு பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடை உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ள கோட்டை பொலிஸார் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு கோரிக்கையின் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பாதையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் நிலைமை வழமைக்கு திரும்பும் என நம்புவதாக சட்டத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

சிகரெட் விலை அதிகரிப்பு

“ சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது” பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சஜித்

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

editor