உள்நாடு

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் சவால்களை வெற்றிக்கொள்வதற்கு புதிய ஆண்டில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம்.

எமது அரசாங்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுபவிப்பதற்காக தமது பிள்ளைகளுடன் இணைவதற்கான வாய்ப்பை இழந்த, விசேட கடமைகளில் ஈடுபட்டு இருப்பவர்களைப் போன்று, வெளிநாடுகளில் இருக்கும் அனைவரினதும் அர்ப்பணிப்பை நினைவுகூருகிறேன்.

மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய ஆண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து இனங்கள் – மதங்கள் சமமாக கருதப்படும்

தற்போது மக்கள் போராட்டம் குருணாகலில் …

புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார பதவியேற்பு!