உள்நாடு

ஃபிட்ச் ரேட்டிங் இலங்கையின் கடன் மீள் செலுத்துகை தரநிலையை மேலும் குறைத்துள்ளது

(UTV | கொழும்பு) –  ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடனை மீள செலுத்தும் திட்டம் வரையப்படும் வரையில், வெளிநாட்டு கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியுள்ளமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இதற்கமைய, ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை C நிலைக்கு தரம் குறைத்துள்ளது.

முன்னதாக, எஸ்.என்.பி எனப்படும் ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனமும் இலங்கையை CCC நிலையில் இருந்து CC நிலைக்கு குறைத்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை இலங்கை தற்காலிமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இது நடைமுறைக்கு வரும் போது, கடன் வழங்காமை நிலையை குறிக்கும் எஸ்.டி என்ற தரம் அறிவிக்கப்படும் எனவும் எஸ்.என்.பி எனப்படும் ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு

மின்துண்டிப்பு அமுல் குறித்து இன்று தீர்மானம்

ரவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்