அரசியல்உள்நாடு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை

2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பை மார்ச் மாதம் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்திற்கான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களும், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டனர்.

Related posts

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு

editor

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்

தரம் 06 சேர்ப்பதிற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள்