அரசியல்உள்நாடு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் – ஜனவரி மாதம் 9 ஆம் திகதி

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சந்தையில் நிலவும் நாட்டரிசியின் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தவும் அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் ஸ்வர்ண நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி

ரிஷாதின் கைது யாரை திருப்திப்படுத்த? – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

காதலர் தினத்தில் கஞ்சா சொக்லட்?