உலகம்விளையாட்டு

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று!!

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது.

அதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி  இன்றிரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 9வது ‘டி-20’ உலகக்கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகிறது. ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இன்று பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடர் (2023), தற்போது ‘டி-20’ உலகக்கிண்ணத் தொடர் என மூன்று ‘உலக’ இறுதிப்போட்டிகளில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெறுகிறார் ரோகித் சர்மா.  
 
தென் ஆப்ரிக்காவும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐ.சி.சி., ‘நாக்-அவுட்’ போட்டிகளில் சொதப்புவதால், ‘சோக்கர்ஸ்’ என கேலி செய்தனர். இம்முறை அபாரமாக செயல்பட்டு, விமர்சனங்களை தகர்த்து இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.

Related posts

குசல் மெண்டிஸ் தனது 06 வது சத்தைப் பதிவு செய்தார்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு கொரோனா

ஒரே வாரத்தில் 2-வது முறையாகவும் பெட்ரோல் விலை உயர்வு