உள்நாடுசூடான செய்திகள் 1

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விடுமுறை நாட்களில் விசேட ரயில் சேவை

ஐந்து மாத காலத்திற்குள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170

UPDATE-பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் சுட்டுக் கொலை