உள்நாடு

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

2024ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி புதிய பாடசாலை கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைவுள்ளதுடன், இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமானதோடு, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை – மஹிந்த தேசப்பிரிய.

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல

ஓரினச்சேர்க்கை சட்டங்களை மாற்ற ஜனாதிபதி பணிக்குழு பரிந்துரை