உள்நாடு

இன்றும் மழையுடனான வானிலை

(UTV | கொழும்பு) – கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் தொடர்ந்து காணப்படுகின்றது. எனவே தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்குமற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை அது இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று(11ஆம் திகதி) உலுக்குலம, அனுராதபுரம் புதிய நகரம், கைநட்டம மற்றும் பலுகொல்லேவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Related posts

‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் இருவர் கைது

பிரதமருடன் இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு

புத்தக பையின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!