(UTV | கொழும்பு) – 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன , காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மக்கள் நிராகரித்த அமைச்சரவை நியமிக்கப்பட்டால் டலஸ் அலஹப்பெரும தலைமையில் மேலும் 10 பேர் சுயாதீனமாக செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.