உள்நாடு

டீசலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – தரம் குறைந்த டீசலை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அவதானிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், மாதிரிகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன் அன்று இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் தரமான பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அனைத்து பேருந்து சாரதிகளும் அதன் பாவனை தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.

எனவே, பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதும், அதிகாரிகளிடம் புகார் செய்வதும் தனது உத்தியோகபூர்வ பொறுப்பு என்றார்.

விஜேரத்ன மேலும் கூறுகையில், எரிபொருளின் தரம் குறித்து உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட இலங்கைக்கு தகுதியான அதிகாரம் இல்லை என்பதால் டீசல் மாதிரிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட வேண்டும்.

இந்த முறைகேடு காரணமாக பெரும்பாலான பேருந்துகளின் இயந்திரம் பழுதாகிவிட்டதாக அவர் வலியுறுத்தினார்.

Related posts

வலு வலுவிழந்து விலகிச் செல்லும் புரேவி

திருப்பதி பயணத்தில் பிரதமர்

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரர் பலி