உள்நாடு

‘எதிர்காலத்தில் லெபனானைப் போன்று இலங்கை மாறலாம்’

(UTV | கொழும்பு) – இன்று லெபனான் அனுபவிக்கும் நிலையை இலங்கை எதிர்காலத்தில் அனுபவிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நாட்டில் 50% வைத்தியர்கள் ஏற்கனவே வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெற முடிவெடுப்பதில் லெபனான் அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே உரசல் ஏற்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு ஒரு குழு விருப்பம் தெரிவித்தாலும், மற்றவர்கள் அவ்வாறு செய்யாத அதே நிலை இலங்கையிலும் நிலவுகிறது என்றார்.

என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்றும், எனவே எதிர்காலத்தைப் பார்க்க பாராளுமன்றத்தை வலியுறுத்தினார்.

அமைச்சர் அலி சப்ரியும் அவர்கள் IMF க்கு முன்னதாகவே சென்றிருக்க முடியும் என்பதை ஒப்புக்கொண்டதால், அரசாங்கம் தனது கடமையில் தவறிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா கூறினார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

இராணுவத் தளபதிக்கும் கொவிட் தடுப்பூசி