(UTV | வொஷிங்டன்) – உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர்.
இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.