உள்நாடு

“சேனாதிபதி 200 பேரை மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினார்”

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி 200 பேரை ஈடுபடுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டதாகவும், அதில் நிஸ்ஸங்க சேனாதிபதி கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

நிஸ்ஸங்க சேனாதிபதி தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

“..மிரிஹான சம்பவம் நடந்தவுடன், பாதுகாப்பு அமைச்சின் அவசரக் கூட்டம், பாதுகாப்புச் செயலாளர் உட்பட, கூட்டப்பட்டது. அவன்ட் கார்ட் கட்டளைத் தளபதி நிஸ்ஸங்க சேனாதிபதியும் கலந்து கொண்டார். நான் 200 பேரை குடும்பத்திலிருந்து இறக்கிவிட்டதாகச் அவர் கூறியிருந்தார்..”

Related posts

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு!

 இணையம் ஊடாக பணம் மோசடி- 8 பேர் கைது