உள்நாடு

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

(UTV | கொழும்பு) –  புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், அலி சப்ரி நிதி அமைச்சராகவும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும், .தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஷ் குணவர்தன, முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை அரசாங்கத்தின் பணிகளை தொடர்வதற்காக ஜனாதிபதியினால் இன்று காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

ரணில் பொதுஜன பெரமுனாவின் வேட்பாளர் அல்ல, நாட்டின் வேட்பாளர்

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை