உள்நாடு

தற்போது அவசர அமைச்சரவைக் கூட்டம்

(UTV | கொழும்பு) –   அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்று தற்போது நடைபெறுவதாக அரசாங்க உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் பலம் வாய்ந்த அமைச்சர்கள் ஓரிருவர் பதவி விலகத் தயாராகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று நடைபெறவிருந்த தொடர் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களை முடக்குவது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடும் போது, ​​ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பதினொரு எதிர்க்கட்சிகள் அடங்கிய குழு சுயேச்சையாக அமரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

பாகிஸ்தான் கடற்படை பிரதம அதிகாரி – பிரதமர் இடையே சந்திப்பு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை