கிசு கிசு

பசிலும் இராஜினாமா : இடைக்கால அரசில் பசிலுக்கு எந்தப் பதவியும் இல்லையாம்

(UTV | கொழும்பு) –   பதவியை இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு தரப்பிலும் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ராஜபக்சக்களுடன் அரசியல் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பசில் ராஜபக்ஷ தனது நிதி அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்தியா ராணுவ தொப்பி விவகாரம்-பாகிஸ்தான் குற்றச்சாட்டு

புதிய Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் செயலி நீக்கம்?

பழுதடைந்த முட்டைகளால் கேக் தயாரித்து வந்த பேக்கரி…