(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு காபந்து அரசாங்கத்தை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளது.
காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
பொது அவசரநிலையை அமுல்படுத்துவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திம வீரக்கொடி இன்று(03) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கவில்லை, எனவே மக்களிடமிருந்து பொது பிரதிநிதிகளை மட்டும் பாதுகாக்கும் வகையில் பொது அவசரநிலையை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.