(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டுமென இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று(03) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இருவரிடமிருந்தும் சாதகமான பதில் கிடைத்ததாக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் திரான் அலஸ் ஆகியோருடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பில் கலந்துகொண்டதாக வீரவன்ச தெரிவித்தார்.
“நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள அமைச்சரவையால் செயல்பட முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, அமைச்சரவையை கலைத்துவிட்டு, இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்துக் கட்சி அல்லது பலதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதை விட, இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதே சிறந்த வழி.