வணிகம்

2020 ஜனவரியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள vivo S1 Pro

(UTV|COLOMBO) – vivo Mobileஇன் புதிய ஸ்மார்ட்போனான S1 Pro, 2020 ஜனவரி மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது vivoவின் பிரத்தியேக புகைப்படத் தொழில்நுட்பம் மற்றும் அதன் சக்திவாய்ந்த மென்பொருளை உள்ளடக்கியது. S1 Proவின் 48MP கெமரா மிகவும் தெளிவாக, சிக்கலின்றி புகைப்படமெடுக்க உதவுவதுடன், மேலும் 3 கெமராக்கள் wide-angle, macro மற்றும் bokeh என எந்தவொரு காட்சிக்கும் ஏதுவானதாக உள்ளன. இதன் இன்னுமொரு முக்கிய அம்சம் என்னவெனில் 32MP முன்பக்க கெமராவாகும், இது இந்தத் துறையில் முன்னணியானதாகும். ஒருவர் தனது படங்களை zoom செய்து பார்க்கும் போதும் கூட அதன் தெளிவு மற்றும் அதில் தமது அழகைக் கண்டு ஆச்சர்யப்படுவார்.

அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புக்கான புதிய எல்லையை நிர்ணயித்துள்ளதுடன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இளைஞர்களை வலுவூட்டி , அவர்களது புதுமையான பாணியை வரையறை செய்கின்றது. இதன் வைரம் போன்ற வடிவமைப்பானது நகைகள் மற்றும் அரண்மனைகளின் படங்களை அடிப்படையாகக் கொண்டது, இது புத்துணர்வளிக்கும் தோற்றத்தைத் தருவதுடன், புதுமையான உணர்வை இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்குகின்றது. இதன் 48MP Quad Camera வைரம் போன்ற வடிவத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இது பயனாளிகள் தமது தனித்துவம் தொடர்பில் அறிந்துகொள்ளத் தூண்டும் புதுமையான வடிவமாகும்.

S1 Pro பயனாளிகளுக்கு 90% screen-to-body ratio உடன் கூடிய 6.38 அங்குல Super AMOLED திரை , 1080P resolution மற்றும் அற்புதமான வண்ண ஒத்திசைவு ஆகியனவற்றை கொண்டு வருகின்றது. சினிமா காட்சி அனுபவத்தை பயனாளிகள் பெற இது உதவுகிறது. பாவனையாளர்கள் தங்கள் S1 Proவினுள் In-Display Fingerprint Scanning மூலம் உடனடியாக நுழைய முடியும். Icon இன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் நவீனமான unlocking animations பாவனையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகின்றன.

“S1 Pro கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்ட உயர் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாக அமையும்,” என vivo Mobile Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி Kevin Jiang தெரிவித்தார். “S1 Proவின் மேம்படுத்த அம்சங்கள் vivo தனது இளம் பாவனையாளர்களுக்கு சிறப்பான பாவனை அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான கடமையை வலியுறுத்துகின்றது,” என அவர் மேலும் தெரிவித்தார்.

S1 Proவினை Snapdragon 665 chipset மற்றும் 8GB RAM இனால் வலுவூட்டப்படுகின்றது. இதன் உள்ளக நினைவகம் 128 GB என்பதுடன் இதனை microSD மூலம் 256 GB வரை நினைவகத்தை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனானது பாரிய 4,500mAh பட்டரியைக் கொண்டுள்ளதுடன் இது USB-C ஊடான 18W dual-engine fast charging வசதியையும் கொண்டுள்ளது. இந்த போனின் அளவு 159.25 x 75.19 x 8.68mm என்பதுடன் நிறை 186.7 கிராம்களாகும்.

முன்னதாக vivo S1 இலங்கையில் 2019 ஓகஸ்ட் மாதம் வேறு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

vivo பற்றி

vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது.

வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் in Beijing, Hangzhou, Shanghai, Nanjing, Shenzhen, Dongguan, Taipei, Tokyo மற்றும் San Diego (USA) ஆகிய 9 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan, Chongqing, India, Bangladesh மற்றும் Indonesia ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.

Related posts

PET பிளாஸ்டிக்; பெரும் சொத்தாகும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு