உள்நாடு

மிாிஹானை சம்பவம் : விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு

(UTV | கொழும்பு) – மிாிஹானையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை – மிரிஹானையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல்மாகாண குற்றத்தடுப்புபிரிவினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை பொறுப்புகள் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தபால் சேவைகள்

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது