உள்நாடு

‘அரபு வசந்தம்’ என நாம் முஸ்லிம்களை குறிக்கவில்லை : மத்திய கிழக்கின் உதவிகளை தடுக்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – நுகேகொட ஜுபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் இன்றைய விசேட ஊடக சந்திப்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என நாம் கூறவில்லை. அதனை வைத்துத் தான் ஆர்ப்பாட்டதாரர்கள் கூடியுள்ளனர். சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு அடிப்படைவாதிகள் உள்நுழைந்ததால் தான் நாம் இந்த வசனத்தினை பவித்தோம். நாம் அடிப்படைவாதிகள் என்று எந்தவொரு மதத்தினையும் இலக்காக வைத்துக் கூறவில்லை.

அடிப்படைவாதிகள் என்போர் மக்கள் விடுதலை முன்னணியாக இருக்கட்டும் ஐக்கிய மக்கள் சக்தியாக இருக்கட்டும் ஏனைய அரசியல் கட்சிகளாக இருக்கட்டும் அவர்களது தூண்டுதலாலேயே இந்த வன்முறை இடம்பெற்றதாக நாம் கூறுகிறோம். அவர்களை பற்றித்தான் நாம் கூறினோம். அதனல்லாது நீங்கள் கேட்பது போல் நாம் அடிப்படைவாதிகள் என முஸ்லிம், தமிழ் பற்றிக் கூறவில்லை. பொதுவான ஆர்ப்பாட்டத்தினையும் பார்க்க இதனை வன்முறையாக்கி அதனை தூண்டியவர்கள் அடிப்படைவாதிகள் என்றே கூறுகிறோம்.

இதில் முஸ்லிம்கள் என பிழையான கருத்துக்களை பரப்புவதால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் உதவிகள் கூட நிறுத்தப்படும். அவ்வாறு நாம் கூறவில்லை. அரபு வசந்தம் என்ற வார்த்தையினை பாவித்து ஏற்பாடுகளை செய்தது முகநூல்களில் அந்த வசனத்தினை பாவித்தமை தொடர்பில் எம்மிடம் சாட்சிகள் உள்ளது. உங்களுக்கும் வழங்குகிறோம். அதனையே நாம் மேற்கோள்காட்டி கூற வந்தோம் அதில்லாது மத்திய கிழக்கு கதையல்ல இது…”

Related posts

ஆற்றில் விழுந்த லொறி – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி.

6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை!

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!