கிசு கிசுவிளையாட்டு

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு…

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12-ஆவது உலகக்கோப்பை போட்டி வரும் 30-ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. இதில், 10 அணிகள் இடம்பெறுகிறது. ஜூலை 14-ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 46 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பாடலை லாரின், ருடிமென்டல் ஆகியோர் பாடியுள்ளனர்.

மேலும், இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாசாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் இந்த பாடல் உள்ளகியுள்ளதுடன், பாடல் வெளியான சிலமணி நேரங்களில், அது இணையதளங்களில் வைரலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து…

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்