சூடான செய்திகள் 1

வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் இன்று(17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்பு மீளாய்வு தொடர்பில் முதற்கட்ட நடவடிக்கைகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களைத் தௌிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில், மாவட்டப் பிரதிநிதிகள் அல்லது உதவி தேர்தல்கள் ஆணையாளரினால் கிராம உத்தியோகத்தர்களுக்கு தௌிவுபடுத்தப்படவுள்ளது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வீடுகளுக்கு விநியோகிக்கபடவுள்ளதுடன், பூரணப்படுத்தப்படும் வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதிக்கு பின்னர் சேகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல்-டாக்டர்

மாத்தறை சம்பவம்-மூன்றாவது சந்தேக நபரும் கைது

நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்தார்