சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம் கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆ.எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய வைபவத்திற்கு இணைவாக நாட்டின் ஏனைய பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வைபவங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

தற்பொழுது பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்குவதற்கான பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆ.எம்.எம். ரத்னாயக்க தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

தெஹிவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வேன்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்