உள்நாடு

பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

110 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை நேற்று 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த திடீர் விலை அதிகரிப்பு நியாயமற்றது என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பதிவுத் திருமணம் தொடர்பிலான அறிவிப்பு

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

கடந்த 24 மணித்தியால கொரோனா நோயாளர்களது விபரம்