(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட அமர்வினை அடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிம்ஸ்டெக் அமைச்சர்கள்மட்ட அமர்வினை அடுத்து முன்னாள் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து அவரிடம் கூறப்பட்டது. https://t.co/tV7gKvXdND
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 29, 2022
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து அவரிடம் கூறப்பட்டது.
அத்துடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார உதவிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவும் குறித்த நெருக்கடியான தருணத்தில் இந்தியாவின் உதவி உரித்து நன்றி தெரிவித்தார்