(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்வடைகின்றேன்.
இந்திய-இலங்கை உறவு குறித்து சிறப்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. நமது உறவுகளுக்காக அவர் வழங்கிய ஆதரவைப் பாராட்டியதுடன் தற்போதைய நிலைமை குறித்த கருத்துகள் பகிரப்பட்டன. https://t.co/QKBiXDt6IH— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 29, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார். இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது நன்றி தெரிவித்தார்.குறித்த சந்திப்பு இந்திய தூதரகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இந்த அனர்த்தமான தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்டியதற்காக இந்தியாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு மேலதிக உதவிகளையும் வழங்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.