உள்நாடு

ரணில் பிரதமர் பதவியினை கோரவில்லை – UNP

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது கட்சியோ தேசிய அரசாங்கத்தையோ அல்லது பிரதமர் பதவியையோ கோரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி ஊடக அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

மாறாக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்க்க மத்திய வங்கியினால் நிதி

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

 நாடு முழுவதும் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்