உள்நாடு

சீனா அரிசியினால் நாட்டின் நாளாந்த அரிசிக்கான தேவை பூர்த்தியாகாது

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள 2,000 மெட்ரிக்தொன் அரிசியைக் கொண்டு நாட்டின் நாளாந்த அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது என அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மக்களுக்கு தீங்கு விளைவிக்காத உணவுகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நச்சு இரசாயனங்கள் கொண்ட உணவுகளை மக்களுக்கு வழங்கி வருவதாக கூட்டமைப்பின் அழைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் யூடிவி இணையப்பிரிவு வினவுகையில்; தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாத உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் விவசாயப் பாதையை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், இதன் விளைவாக விவசாயத் துறை வீழ்ச்சியடைந்தது, அறுவடை குறைந்தது மற்றும் விவசாயிகள் சுமைக்கு ஆளானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், உலகில் மிகவும் தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் நாட்டிலிருந்து அரசாங்கம் தற்போது அரிசியை இறக்குமதி செய்து வருவதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான், மியன்மார், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும், இந்த நாடுகள் அனைத்தும் இலங்கையை விட அதிக இரசாயனங்களை பயன்படுத்துவதாகவும் கருணாரத்ன குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்புகளுக்கு இரண்டு வருட உத்தரவாதக் காலம் உள்ளது, மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை மூன்று மாதங்களுக்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்றார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியில் 25 வீதமான தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருந்தால், இறக்குமதி செய்யப்படும் அரிசியில் 75 வீதம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

இடியுடனான மழை பெய்யக் கூடிய சாத்தியம்

புத்தாண்டின் சுப நேரங்கள்

பொதுத்தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்