உள்நாடு

‘தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ – நாமல்

(UTV | கொழும்பு) –  அமைச்சரவையை குறைப்பதற்கும் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வந்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“.. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையை குறைக்க முன்வந்தார். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது அமைச்சரவையில் உள்ளவர்களை நீக்கி இதை குறைக்கும் நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முன்னுதாரணமாக இருக்க முடியும். அப்படியானால் நான் பதவி விலகத் தயார். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முன்மாதிரியாக இருங்கள். நான் மொட்டில் இருந்து ஒரு உதாரணம் தருகிறேன்..” 

Related posts

மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 2வது அமர்வு[VIDEO]

பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது.