உள்நாடு

காகித தட்டுப்பாட்டினால் பத்திரிகைகள் அச்சிடுவதில் வரையறை

(UTV | கொழும்பு) –  நாட்டின் முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றான உபாலி நியூஸ்பேப்பர்ஸ் குழுமம், தற்போது நிலவும் காகித நெருக்கடி காரணமாக சனி நாளிதழ் அச்சிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், அச்சிடப்படாவிட்டாலும் இணையத்தள மின் செய்தித்தாள்களாக வெளியிடப்படும் என அதன் விநியோக முகாமையாளர் சிசிர கலதெனிய தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் நிலவும் டாலர் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் காகித விலைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைப் பத்திரிகைகள் தங்களின் தற்போதைய பத்திரிகைகளை நிர்வகிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன, அதில் ஒன்று பக்கங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாகும்.

கடந்த சில மாதங்களாக பல பத்திரிகை நிறுவனங்கள் தங்களது பத்திரிகைகளின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன.

இதேவேளை, பல்கலைக்கழகம் மற்றும் சுகாதார செய்தித்தாள்களை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திற்கு மட்டுப்படுத்த லேக்ஹவுஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மீதம் உள்ள மூன்று வாரங்களுக்கான வெளியீடுகளை இ-பேப்பர்களாக வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இம்மாத ஆரம்பம் முதல் ஞாயிறு பத்திரிகையின் விலையை 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக லேக் ஹவுஸ் 20 ரூபாவினால் உயர்த்தியது.

காகித நெருக்கடிக்கு முகங்கொடுத்து இ-பேப்பர் மூலம் நாளிதழ்களை வாசகர்களுக்கு நெருக்கமாக்க முயற்சித்த போதிலும், அது பத்திரிகை விற்பனையில் பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளதாக லேக்ஹவுஸ் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆசிரியர் பணிப்பாளருமான தர்மஸ்ரீ காரியவசம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை அச்சகத்தின் பொருளாளர் செல்வம் கேதீசும் தற்போது நிலவும் காகித நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கையில், உலக சந்தையில் நாணய மாற்று வீத நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் காகித விலைகள் காரணமாக தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

Related posts

சென்னை – யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை இன்று ஆரம்பம்

editor

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் m.p விஜயம்