(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் மார்ச் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் பரத நடனம், கிழக்கு, கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை பாடங்களுக்கான நடைமுறை சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எல்.ஏ. எம். டி. தர்மசேன தெரிவித்தார்.
இந்த சோதனைகள் நாடளாவிய ரீதியில் உள்ள நடைமுறை பரீட்சை மையங்களில் நடத்தப்படும்.
பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான நுழைவுச் சீட்டுகள் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்தி ஒருவருக்கு அனுமதிச் சீட்டு கிடைக்காத பட்சத்தில், பரீட்சைகள் திணைக்களத்தின் doenets.lk இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள் தங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 011 2 78 42 08 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகும் மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தகைய மாணவர்களுக்கு அதற்கு வேறு திகதி வழங்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.