உள்நாடு

திங்களன்று புதிய ரயில் கட்டண திருத்தம்

(UTV | கொழும்பு) – நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்த நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் இக்கட்டண உயர்வானது உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

ரயில் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதால் பேச்சுவார்த்தையின் போது அனுமதிக்க முடியாது என அமைச்சர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரயில் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது, இதற்கு ரயில்வே திணைக்களத்துடன் இணைந்த பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

எரிபொருள் நெருக்கடி காரணமாக அதிகளவான பயணிகள் புகையிரதத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் புகையிரத சேவைக்கு வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறான நிலையில் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கப்பட வேண்டியது என பல தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் புதிய ரயில் கட்டணத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

வாகன சேவைக் கட்டணமும் அதிகரிப்பு

அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அழகியவன்ன

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது