உள்நாடு

இன்று UNP இனது சத்தியாக்கிரகப் போராட்டம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு – ஹைட் மைதானத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே சத்தியாகிரகத்தின் முக்கிய நோக்கமாகும்.

சத்தியாகிரகப் போராட்டம் ஒரு அரசியல் சார்பற்ற நிகழ்வு என்றும், எனவே தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேவைக்காக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் நடைபெற்ற மாபெரும் சத்தியாக்கிரக இயக்கங்களை முன்மாதிரியாகக் கொண்டு இன்றைய அகிம்சை சத்தியாகிரகத்தில் தேசப்பற்றுள்ள பெருமளவிலான பிரஜைகள் பங்குகொள்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், செயலாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று மாலை கொழும்பில் நடைபெறும் சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர்.

Related posts

போதைப்பொருள் விற்பனை : 13 அதிகாரிகளும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு!

ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் ?

editor