உள்நாடு

இன்றும் நாட்டில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  இன்று நாட்டில் எட்டு பகுதிகளுக்கு 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி 50 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் – சஜித்

editor

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

editor

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு