(UTV | கொழும்பு) – உணவக உரிமையாளர்கள் தேநீர் கோப்பையின் விலையை 60 ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.
சீனி மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக 30 ரூபாய்க்கு விற்பனையான தேநீர், திடீரென இருமடங்கு விலை உயர்ந்ததால், நுகர்வோர் சங்கடத்தில் உள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே விறகின் தேவை அதிகரித்து, ஐந்து சிறிய விறகுகள் கொண்ட மூட்டை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விறகின் தேவை அதிகரித்துள்ளது. முன்பு இதுபோன்ற மூட்டை 40-60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நகர்ப்புறங்களில் ஐந்து முதல் ஆறரை அடி நீள மரக்கட்டைகள், ஆறு மூட்டைகள், 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.