உள்நாடு

அசாத் சாலியின் மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேகொட ஆகியோருக்கு எதிராக நட்டஈடு கோரி முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்ட மற்றும் முஸ்லிம் சட்டங்கள் தொடர்பில் தீவிரவாத கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் எட்டு மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

Related posts

போக்குவரத்து தண்டப் பணத்தை செலுத்த புதிய முறை

பாராளுமன்றம் இன்று கூடியது

என்.ஜி. வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!