உள்நாடு

முதலீட்டு ஊக்குவிக்க கோட்டா-மஹிந்த-பசில் தலைமையில் குழு

(UTV | கொழும்பு) – முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அடங்கிய 12 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இந்தக் குழுவின் மூலம், வரிப் பரிமாற்றம், தேசிய பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பாதிப்பு, பொது நிதியின் பயன்பாடு, சட்டக் கடப்பாடுகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், நிலப் பயன்பாடு மற்றும் உரிமை, வங்கி மற்றும் நிதி விவகாரங்கள் மற்றும் இலங்கையில் முதலீட்டாளரால் முன்மொழியப்பட்ட முதலீடுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, எஸ்.பி. திஸாநாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்த அமரவீர, எஸ்.எம் சந்திரசேன, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, டி.வி. சானக்க மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

  • ஆர்.ரிஷ்மா  

Related posts

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முடக்கம்

வற் பதிவு சான்றிதழ் தொடர்பில் விசேட அறிவிப்பு!

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!