உள்நாடுவணிகம்

சதொச ஊடாக நியாயமான விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர தேங்காய் எண்ணெயை நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கான புதிய வேலைத்திட்டம் தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், பொது மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியும்.

நியாயமான விலையில் தேங்காய் எண்ணெயை வழங்குவது தொடர்பில் இந்த வாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் தமது சங்கம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரிக்கும் நிறுவனங்கள் பங்குகளை மறைத்து தற்போது பாரிய இலாப விகிதங்களைக் கொண்டு தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் தற்போது விலைகள் திசை திருப்பப்பட்டுள்ளதாக டி சில்வா கூறினார்.

எனவே நுகர்வோரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது சங்கம் தயாராக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலை நேரத்தில் மேலதிகமாக 01 மணி நேரம் நீடிப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !