உள்நாடு

சீனாவிடம் இலங்கை மேலும் 2.5 பில்லியன் டொலர் கடன் கோரிக்கை

(UTV | கொழும்பு) –   சீனாவிடம் மேலும் 2.5 பில்லியன் டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.

அது இரண்டு கட்டங்களாக $1 பில்லியன் கடன் மற்றும் $1.5 பில்லியன் கடன் வசதியாகும்.

இந்தக் கோரிக்கையை சீனா பரிசீலித்து வருவதாக சீனாவுக்கான சீனத் தூதுவர் சி வென்ஹாங் (Chi Wengong) கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் இலங்கைக்கு 2.8 பில்லியன் டொலர் கடனுதவியை சீனா வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 1.5 பில்லியன் டாலர் மாற்று விகித வசதியாக உள்ளது.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்த சீனா ஒருபோதும் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

70 வருடங்களுக்கு முன்னர் சீனாவின் வீழ்ச்சிக்கு இலங்கை எவ்வாறு உதவியது என்பதை மறக்க முடியாது என சீ வென்ஹொங் கூறினார்.

இலங்கையில் சீனத் திட்டங்களின் மூலம் சுமார் 11,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தூதுவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகரம் ஏற்கனவே சுமார் 1.05 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக சீ வென்ஹொங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் தொழில்களை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தங்களில் 43 நிறுவனங்கள் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பிரசார செலவு அறிக்கை குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

editor

ஊழலற்ற நேர்மையான புதிய முகங்களை மக்கள் தேடுகின்றார்கள் – பிரபா கணேசன்

editor

ராஜாங்கனையில் சில பகுதிகள் முடக்கம்