உள்நாடு

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) –  கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற நபர் ஒருவர் இன்று (20) மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பெட்ரோல் எடுப்பதற்காக வரிசையில் காத்திருந்த நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

70 வயதுடைய நபர் மாகொல பிரதேசத்தை சேர்ந்தவர்.

நாட்டிலேயே எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து இறந்த இரண்டாவது நபர் இவர்.

நேற்று (19) கண்டி பிரதேசத்தில் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற நபரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

71 வயதான இவர் வத்தேகம, உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்தவர்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று (20) நடைபெறவுள்ளன.

Related posts

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்

editor

சீனாவின் கொள்கலன்களை சோதனையிட தேவையில்லை