(UTV | கொழும்பு) – தற்போதுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்களை உயர்த்துவது தொடர்பில் தொலைபேசி நிறுவனங்கள் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அறியப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
உள்ளூர் கட்டணங்கள் அல்லது இணைய கட்டண உயர்வுகளுக்கு இதுவரை அனுமதி இல்லை என்று தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது.