(UTV | கொழும்பு) – மாலைதீவில் இருந்து நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில் 3,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,500 மெற்றிக் டன் எரிவாயு எதிர்வரும் 2 நாட்களுக்கு போதுமானதானதெனவும் நாளை நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.